REAL LIFE STORIES
பொய்மை மனிதர்கள்

நந்திதாவிற்கு……

மனசு வலித்தது.

இன்னமும் படபடப்பாய் இருக்கிறது.

இந்த முன்சீப் என்ன நினைத்துக் கொண்டார்.  தான் நீதிமன்றத்தில் முன்சீப் என்றால் அங்கு பணிபுரியும் அத்தனை வழக்கறிஞர்களும் இவருக்கு அடிமையா?

ரத்திஷ் கட்டிய தாலி நெஞ்சிலே கனமாக உறுத்துகிறது.  ரத்திஷை பிரிந்து வந்தது தவறு தானோ? ஆனால் ரத்திஷ் போன்ற காட்டுமிராண்டித் தனமான கணவனிடம் திரும்பிச் செல்வது என்னால் எப்படி முடியும்” – நந்திதா கண்ணீர் மல்க யோசனை செய்கிறாள்.

மேடம், உங்களை ஐயா அழைக்கிறார்”-முன்சீப் ராமநாதனின் ப்யூன்.  நந்திதாவின் சிந்தனை கலைகிறது.  கோபத்தில் முகம் சிவக்கிறது.  இன்று இது இரண்டாவது முறை.

என்ன, மாரி விஷயம் என்னவாம்?”

தெரியவில்லை அம்மா, ஏதோ கமிஷன் சம்மந்தமாக டிஸ்கஸ் பண்ணணுமாம், சுருக்க வந்திருங்க, வர்றேங்கம்மாநந்திதாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை கலக்கத்தோடு சிந்தித்தாள், “இன்று இரண்டில் ஒன்று முடிவு செய்துவிட வேண்டியது தான்.  கணவனை பிரிந்த பெண் என்றால் அவள் பெண்மையை சுலபமாய் பங்கு போட்டுவிடலாம் என்று எப்படி இவர்களால் நினைக்க முடிகிறது…. தெய்வமே.

நந்திதா தனது வக்கீல் அலுவலகத்தில் இருந்து இறங்கி நீதிமன்றத்திற்கு வந்தாள்.  முன்சீப் ராமநாதனின் சேம்பருக்குப் போக அனுமதி கேட்டாள்

உள்ளே வக்கீல் குமாரசாமி இருக்கிறார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேடம்

மாரி சொன்னான்.

சில நிமிடங்களில் வக்கீல் குமாரசாமி வெளியே வந்தார்.  நந்திதாவை பார்த்ததும் என்ன மேடம் சேம்பருக்கு வந்திருக்கீங்கம்..ம்..ஜமாய்ங்க விஷமமாய் கண்சிமிட்டினார். 

நந்திதாவிற்கு எரிச்சலாய் இருந்தது.  சிறிது நேரத்தில் நந்திதா சேம்பருக்குள் அனுமதிக்கப்பட்டாள்.  உள்ளே ஒருஅமானுஷ்ய நிசப்தம் நிலவியது.

குட் ஆப்டர்னுன், சார்,” நந்திதா வணக்கம் கூறினாள்

முன்சீப் ராமனாதன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.  நிமிர்ந்தே பார்க்காமல் சைகையால் அமரச் சொன்னார்.  இந்த பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை”, நந்திதா வெறுப்புடன் அமர்ந்தாள்.

சற்றே பொறுத்து முன்சீப் ராமநாதன் நிமிர்ந்தார்.  பேனாவை மூடி பேனா ஸ்டான்டில் வைத்தார். க்ம்கும்எனக் கனைத்து கையைத் திரும்பி மணிபார்த்தார்.

நான் அழைத்து சரியாய் பத்தே நிமிஷத்தில் வந்து விட்டீர்களே…” எனக் கனைத்து கையைத் திரும்பி மணிபார்த்தார்.

சார் எதற்காக அழைத்தீர்கள்”.

எதற்காக என்று புரியவில்லையாஎன்ன? சாரி..ம்..நான் காலையில்  கூறியது பற்றி என்ன முடிவெத்துள்ளீர்கள் மேடம்”.

        “எதை முடிவெடுக்கச் சொல்கிறீர்கள், சார்”.

        “என்னம்மா நீங்க.  ஒன்றும் புரியாதது போல்நீங்களும் உங்க கணவரும் பிரிந்து தானே இருக்கிறீர்கள்.

        நந்திதாவுக்கு சுவாசம் முட்டியது.  அவசரமாய், “இல்லையே சார்,” என்று தலையசைத்தாள்.

      “ஏன் மழுப்பறீங்க? அதனால ஒண்ணும் தப்பில்லை.  உலகத்தில் உதவி செய்ய எத்தனை பேர் இருக்கோம்.  தனியா vaazhvathu ஒண்ணும் பெரிய சிரமமில்லைநீங்க என்ன நினைக்கறீங்க”, என்று மிக நிதானமாய், மிகுந்த யோசனையோடு ராமனாதன் கேட்டார்.

        அதைப் பற்றி எல்லாம் இப்பொழுது எதற்கு சார் நீங்க எதற்காக என்னை அழைத்தீர்கள் என்று சொன்னால்

        ராமநாதன் இடைமறித்தார்

      “இதோ பாருங்கள் அம்மா, தனிமை என்பது எத்தனை சிரமமானது என்று என்க்குத் தெரியும்.  அதனால் உங்களுக்கு தனிமையில் போர் அடிக்கும் போது அடிக்ககடி என் வீட்டிற்கு வாருங்கள்.  என் குடும்பம் ஊரில் இருப்பதால் நானும் தனியாகத் தானே இருக்கிறேன்.  நாம் இருவருக்கும் மிக சுலபமாய் நேரம் போகும்.  மனதும் சந்தோஷமாக இருக்கும்.

அயோக்கிய ராஸ்கல்”, என்று நினைத்த நந்திதா லேசான முறுவலுடன், “இல்லை சார் தனிமை எனக்கு அத்தனை கஷ்டமானதாக ஒன்றும் இல்லை.  என்னால் சமாளிக்க இயலும்.  என்றாள் சற்றே கண்டிப்புடன்.

ராமநாதன் முகத்தில் ஒரு கடுமை நிலவியது.  சட்டென்று எழுந்து சேம்பரிவ் இங்கும் அங்கும் உலவினார்.

     நந்திதாவும் வழியின்றி எழுந்து நின்றாள் ராமநாதம் நந்திதாவை சற்றே நெருங்கி ஏகவசனத்தில் இறங்கி, “நீ நல்லா யோசனை செய்து பார். வக்கீல் தொழிலில் ஆரம்ப கட்டம் எத்தகையது என்று எனக்குத் தெரியும்.  உனக்கு என்ன வருமானம் வரும் என்பதும் எனக்கு புரிந்ததால்  தான் இத்தனை அக்கரையோடு கேட்கிறேன்.  என்னோடு கொஞ்சம் அனுசரணையோடு இருப்பாயானால் உனக்கு நல்ல வருமானம் வரும்படி செய்கிறேன்.  நிறைய வழக்குகளில் உன்னை கமிஷனராக நியமிக்கிறேன்.  உன் அழகு என்னை பிரமிக்க வைக்கிறது.  உன் தனிமை என்னை அழைக்கிறதுவாநந்திதாஎன்னருகேவாஎன்றபடி நந்திதாவின் கையை லேசாக அழுத்தினார்.

நந்திதாவிற்கு தீயை வாரி கொட்டியது போல் சுள்ளென்று இருந்தது.  கையை சடாரென்று உதறினாள்.  கண்கள் கனலாக எரிய முன்சீப்பை பார்த்த சீநாயேநீ நான் மதிக்கும் நீதிமன்றத்தின் முதன்மை அதிகாரி என்பதால் தான் உன்னைச் சும்மா விடுகிறேன்.  இங்கு வைத்து உன்னை செருப்பால் அடித்தால் கூட உன்னால் வெளியே சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும் பெண்ணென்றால் என்ன நினைத்துக் கொண்டாய்நீஅற்பனேநீ இருக்கும் நாற்காலியை நினைத்துநடந்துகொள்என்று கத்திவிட்டு பட்டென்று வெளியே வந்தாள்.

       உடல் வியர்த்து கொட்டியது… “எப்படி இத்தனைபேசினேன்எப்படி என்னிடம் இதை கேட்க முடிந்ததுதெய்வமே இது என்ன சோதனை? நந்திதாவிற்கு நடுக்கமாக இருந்தது.  அருகில் இருந்த தூணை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.  முகத்தை கைக்குட்டையால் அழுந்த துடைத்தாள்.

    மிகமிக சோர்வாக மெதுவாக நடந்து வக்கீல் அலுவலகத்திற்கு வந்தாள் அங்கே தனது சீனியர் வக்கீல் சாம்பசிவத்தை பார்த்தவுடன் அத்தனை நேரத்து துயரத்தையும் சேர்த்து ஓஎன்று அழுது கொண்டே நடந்ததை சொன்னபோது

     சாம்பசிவம் ஆதரவோடு அவளை தேற்றினார்அருகே வந்து அவள் தோள்களை பலமாகப் பற்றி, அழாதேநந்திதாகன்ட்ரோல் யுவர் செல்ப்”… என்று அவளை ஆழமாகப் பார்த்த போதுஅவர் கைகள் வேறு எங்கோ பட்டது. 

       நந்திதா அதிர்ச்சியோடு நிமிர்ந்தாள்……… 

                                            மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில்

                                             மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே

                                             வீட்டில் எம்மிடம் காட்டவந்தார் அதை

                                             வெட்டி விட்டோம் என்று கும்மியடி”.

                                                                                            - பாரதி.


Drop Your Comments Here...

    

REAL LIFE STORIES
அவனி மரத்தடி குப்பைகள்

காலை 9.00 மணி

நாகர்கோவில் நீதிமன்றம் லேசாக சுறுசுறுப்பு அடையத் துவங்கியது.  பலமான காற்றில் அந்த பெரிய அவனி மரத்தின் கொத்து கொத்தான மஞ்சள் பூக்கள் மெத்து மெத்தென தரையெங்கும் இறைந்து விழுந்தது.  மரத்தின் உச்சியிலிருந்த காகங்கள் கலைந்து பறந்தன.

      நாகர்கோவிலையும் முன்னணி வழக்கறிஞராகிய நந்தகோபாலின் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.  குமாஸ்தா சிவலிங்கம் அன்றைய வழக்குகளின் பட்டியலை தயார் செய்து கொண்டிருந்தார்.  டைப்பிஸ்ட் லதா ஏதோ ஒரு வாதுரையை சிரத்தையுடன் வேகமாக தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்.

        மணி 9.30-ஐ நெருங்கியது. 

       ஜீனியர் வக்கீல் மதன் வேகமாக லதாவை நெருங்கி, “லதா, அந்த அர்ஜன்ட் மேட்டரை டைப் பண்ணிட்டீங்களாஅது சீனியர் சாரோட சொந்த வழக்கு முடிச்சிட்டீங்களா?

       இதோ, இன்னும் ஐந்தே நிமிஷத்தில் ரெடி ஆயிடும் ஸார்”, என்றாள் லதா.

மற்றொரு ஜீனியரான மைக்கேல், “எந்த வழக்குடா, “ என மதனை கேட்டான்.

      அதற்கு மதன், “நம்ம ஸீனியருக்கும் ராமச்சந்திரன் ஸாருக்கும் இடையில் இப்ப பெரிசா லடாய் உனக்குத் தெரியாதாடாஇரண்டு பேருக்கும் நடுவில் தான் இப்ப இந்த புதிய வழக்கு.  இன்னைக்கே நம்ப சார் இந்த வழக்கை தாக்கல் செய்து ராமச்சந்திரன் சாருக்கு எதிரா ஸ்டே ஆர்டர் (உறுத்துக்கட்டளை ஆணை) வாங்கப்  போறார்”.

      அடக் கடவுளே! அப்படி என்ன தகராறுடா.  ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்தில வீடு இருக்கிறதால் இணைபிரியாத நண்பர்களா இல்ல இருந்தார்கள்”. -இது மைக்கேல்.

      பக்கத்தில பக்கத்தில வீடு இருக்கறதால தான் இப்ப சண்டையே.  கல்குளம் ஏரியாவுக்கு தாலுக் அலுவலகத்திலிருந்து ரி-சர்வே நில அளவை செய்த பின்னால் வந்த வினை தான் இந்த  வழக்கு.  ரி-சர்வே நில அளவு பழைய சர்வேயிலிருந்து கொஞ்சம் மாறியதில் ராமச்சந்திரன் சாரின் இரண்டு சென்ட் நிலம் நம்ப சீனியர் சாரின் வீட்டு காம்பவுண்டிற்குள் கிடக்கிறது.  என்று ராமச்சந்திரன் சார் பிடிவாதமாய் தர்க்கம் செய்ய, அதை நம்ப சீனியர் முழுமையாய் மறுக்க வாய்சண்டை முற்றி காம்பவுண்டை ஒரு பக்கத்தில் இடிப்பதில் போய் தகராறு முடிந்திருக்கிறது.  நம்ப ஆள் குறைஞ்ச ஆளா.  ஒரு கை பார்க்க வேண்டியது தான்னு நீதிமன்ற கோதாவில் இறங்கி விட்டார் என்றபின் மதன்.

       இதற்கிடையில் லதா, “சார் ஸீனியரரோட மேட்டர் தட்டச்சு செய்துமுடித்துவிட்டேன் என்றாள்.

       நல்ல வேளை சார் வருவதற்குள் முடித்தீர்கள் இல்லைன்னா செம டோஸ் விழுந்திருக்கும்,” என்றான் மைக்கேல்.

மதன் அவசரமாக வந்து தன் இருக்கையில் அமர்ந்தபடியே, டேய்..டேய்.. சாரோட கார் வருது.  சார் வர்றார்டா, “ என்றபடியே ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து விரித்தான். 

        மைக்கேல் மற்றொரு புத்தகத்தில் தனது முகம் புதைத்தான்.

      நந்த கோபால் புயலென அலுவலகத்தில் நுழைந்தார்.  அவர் மிக மிக உயரமாய் இருந்தார்.  அவரது முகத்தை போலவே அவரது சட்டையும் மிக மிக வெண்மையாய் இருந்தது.  அவர் மிகவும் கம்பீரமாய்; தேஜஸ்டனும் காணப்பட்டார்.  அவருக்கு ஒரு ஐம்பது வயதிருக்கும்.

மதன் என்னோட அர்ஜன்ட் மேட்டர் ரெடியா? எல்லாம் டைப் பண்ணியாச்சா”, என மதனிடம் சீரியஸாகக் கேட்டார்.  எல்லாம் ரெடி சார். ப்ராஸா;, சம்மன்ஸ் எல்லாம் சிவலிங்கம் தயார் பண்ணிட்டாரான்னு தெரியலை”, என்றபடியே குமாஸ்தாவை பார்த்தான்.

      சிவலிங்கம் அவசரமாக, “எல்லாம் நேற்று சாயங்கலமே தயார் செய்துட்டேன் சார்”, என்றார்.

     சார்என்ற நந்தகோபால் யோசனையுடன் தன் ஆசனத்தில் சாய்ந்து யோசனை செய்தார்.

    சேஸ ராமச்சந்திரன் எத்தனை நல்ல நண்பன் கேவலம் இரண்டே சென்டிற்காக என் வீட்டு மதில்சுவரை இடிக்கத் தயாராகிவிட்டானே”, என்று மனதிற்குள் அங்கலாய்த்தார்.

    பின்னர் நிமிர்ந்து தனது ஜுனியர்களை நேராகப் பார்த்து பேசத் தொடங்கினார்.  பசங்களா இன்றைக்கு நாம் தாக்கல் செய்யப்போகும் வழக்கு எனது மானப்பிரச்சனை.  இந்த வழக்கில் நான் இன்று உறுத்துக்கட்டளை வாங்க வேண்டியது மிக அவசியம்.  ராமச்சந்திரன் சாமானியன் இல்லை .  அவனும் இந்த தொழிலில் புலி தான்.  அதனால் அவன் நம்மை லேசில் இந்த உறுத்துக்கட்டளையை நாம் வாங்க விட்டு விடமாட்டான்.  ஆனால் நாம் எந்த வழியிலாவது அவன் இன்று நம்மை எதிர்த்து இந்த வழக்கில் வக்காலத்து தாக்கல் செய்வதை தடுக்க வேண்டும்.  அப்படி நாம் தடுத்துவிட்டால், இன்று எப்படியும் நமக்கு சாதகமாக உறுத்துக்கட்டளை கிடைத்துவிடும்.  அதனால் நீங்கள் ராமச்சந்திரனின் குமாஸ்தா சபரியை மடக்கி நீதிமன்றத்திற்குள் வராது தடுக்க வேண்டும்,” என்றார்.

மணி 10.30

ராமச்சந்திரன் தனது கோட்டையும் கவுனையும் மாட்டிக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார்.  நீதிமன்றத்தின் ஒவ்வொரு வக்கீலாக அமர்ந்தார்கள்.

சப்-ஜட்ஜ்; வரவும் ப்யூன், “ சைலன்ஸ்”, என்று கத்தினான்.

உடனே எல்லோரும் எழுந்து நின்றார்கள்.  சப்-ஜட்ஜ்; வந்து வணங்கி தன் ஆசனத்தில் அமரவும், வக்கீல்களும வணங்கிவிட்டு அமர்ந்தார்கள்.

ப்யூன் மறுபடியும், “ப்ராது, ப்ராது, ப்ராது”, எனக் கத்தினான்.

உடனே ராமச்சந்திரன் துரிதமாக தன்னிடமிருந்து அர்ஷன்ட் மனுவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.  மற்ற வக்கீல்களும் பல மனுக்களை உள்ளே கொடுத்தனர்.

சப்-ஜட்ஜ்; ஒவ்வொரு மனுவாகக் கையெழுத்திட்டுவிட்டு ஒவ்வொரு மனுவாக அழைத்து வாதங்கள் கேட்க ஆரம்பித்தார் சிறிது நேரத்தில்  நந்தகோபாலின் வழக்க அழைக்கப்பட்டது.

ராமச்சந்திரனின் குமாஸ்தா சபரி  கையில் வக்காலத்துடன் தயாராக நின்றார்.  நந்தகோபால் மைக்கலிடம் சமிக்ஞை செய்த அந்த நொடியில், மைக்கேல் சபரியிடம் வந்தான்.  சபரியை தள்ளி நீதிமன்றத்தின் வெளியே கொண்டு வந்தான்.

சபரியை நோக்கி, “இங்கே வாரும் உம்மோடு கொஞ்சம் பேச வேண்டும்”, என்றான்.

சபரி மைக்கலிடம், “இருங்க சார், இந்த வக்காலத்தை தாக்கல் பண்ணிட்டு வந்துடறேன். வந்து சாவகாசமாய் பேசலாம்”, என்றான் துரிதமாக.

மைக்கேல், “இரய்யா வக்காலத்து பொல்லாத வக்காலத்து, எனக்கு பதில் சொல்லிவிட்டு போவும்”, என்றான்.

சபரி கலக்கத்துடன், “சார் இந்த வக்காலத்து தாக்கல் செய்யாது போனால் இன்று என் தலை தப்பாது. என் வக்கீலய்யா கொன்னே பூடுவார்”, என்றான்.

அதெல்லாம் என் கதையில்லை, எனக்கு முதல்ல பதில் சொல்லு.  அதற்குபின் உன் வக்காலத்தை கவனி”- இது மைக்கேல்.

சபரி கோபமானான், “அட! என்னைய்யா உம்மோடு பெரிய ரோதனையா போச்சு உனக்கென்ன பதில் நான் சொல்ல வேண்டியிருக்கு”, என்று விலகி நீதிமன்றத்தினுள் போக முயன்றான்.

      மைக்கேல் சபரியின் சட்டையை கொத்தாகப் பிடித்து, “என்னைய்யா விளையாடுறீயா? என் பணத்தை திருப்பிக் கொடு.  பணம் வாங்க கை நீட்டும் போது இனித்து கிடந்தது இல்லை.  இப்ப பணத்தை திரும்பித் தர கசக்குதாக்கும் என்று உஷ்ணமாக,

சபரி, “ விடய்யா நான் எப்போ உங்கிட்ட பணம் வாங்கினேன்”, என்று வியர்க்க,

மைக்கேல் பதிலுக்கு எகிற அங்கு அவர்களை சுற்றி ஒரு சிறு கூட்டம் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியது.

சபரியின் கைகளிலிருந்த வக்காலத்து உயரப் பறந்து அந்த அவனி மரத்தின் பாதங்களில் சரணாகதி அடைந்தது.

நீதிமன்றத்தினுள்ளிருந்து இதனைப் பார்த்தபடியே நந்தகோபால் எழுந்தார்.  நிதானமாக, “மே ஐ ப்ளீஸ், யுவர் ஹர்னர்,” என்று ஆரம்பித்து தனது வாதங்களை கூறத் தொடங்கினார். 

சப்-ஜட்ஜ்; எழுத தொடங்கினார் நந்தகோபால் வாதி தரப்பின் வாதங்களை முடித்தபின் சப்-ஜட்ஜ; பிரதிவாதியின் தரப்பினை அழைத்து யாரும் ஆஜராகாததால் மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில், “வாதி தரப்பு வாதங்களை வைத்து இந்த வழக்கை ஆராய்ந்ததிலும், பிரதிவாதி தரப்பில் யாரும் ஆஜராகாத காரத்தினாலும், வழக்கின் இக்கட்டான நிலைமையை கருத்தில் கொண்டு, நான் வாதிக்கு சாதகமாக உறுத்துக்கட்டளை வழங்குகிறேன்”, என்றார்.

நந்தகோபால் யோவ் ராமச்சந்திரா இப்ப நான் யார்னு உமக்குப் புரிந்திருக்கும்”, என நினைத்தப்படியே திருப்தியோடு நீதிமன்றத்தின் வெளியே வர, மைக்கேலும் சபரியும் இன்னமும் அவனி மரத்தடியில் பெரிதாய் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

 

                “உள்ள நிறைவிலார் கள்ளம் புகுந்திடில்

  உள்ளம் நிறைவாமோ? நன்னெஞ்சே

  தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்

  சேர்த்தபின் தேனாமோ? –நன்னெஞ்சே


Drop Your Comments Here...

    

REAL LIFE STORIES
விவாக விசர்ஜனம்

சுதர்ஸனா மிக அழகானவள். அவள் அந்த நீதிமன்றத்தின் நீண்ட வராந்தாவில் நின்று கொண்டிருந்தாள்.  அவளோடு அவளது சகோதரன் நின்று கொண்டிருந்தான்.  அந்த வராந்தாவின் ஓர் அருகில் சுற்றிலும் பெரிய பெரிய தூண்கள் பல மனிதர்களது மனச்சுமைகளை கனமாய் சுமந்து நின்று கொண்டிருந்தன.  அந்த தூண்களில் ஒன்றில் அவள் லேசாக சாய்ந்து கொண்டாள்.  வேப்பந்காற்று சில்லென அவள் கூந்தலை கலைத்தது.  கலைந்த கூந்தலை சரி செய்தபடி நிமிர்ந்த சுதர்ஸனா…. தூரத்தில் ஹர்ஷா வருவதை கவனித்தாள்.  தலையை லேசாக  வலித்தது.  சுதர்ஸனா கண்களை ஆயாசமாக மூடிக்கொண்டாள்.

           இன்று அவளுடைய வாழ்க்கையின் முக்கியமான நாள்.  ஹர்ஷாவுடன் அவளுக்கு நடந்த விவாகம் ரத்தாகப் போகின்ற நாள்.  சின்ன அணிலொன்று வேப்பம்பழமொன்றை உற்சாகமாய் புரட்டி புரட்டி கடித்தது.  சுதர்ஸனா அணிலின் உற்சாகத்தை வெறித்த படி சிந்தனை செய்கிறாள்.  நானும் இப்படியே தானே உற்சாகத்தோடு என் வாழ்க்கையில் பறந்து கொண்டிருந்தேன்.  திடீரென்று புரியாத இருபது வயதில் என்னை திருமணமென்று கூறி என் சிறகுகளை ஒடித்து கூண்டில் அடைத்தார்கள்.  விவாகமே விமோச்சனம் என்று என்னை ஒப்புக் கொள்ள வைத்து ஹர்ஷா என்ற கால்நடை மருத்துவரிடம் என்னை ஒப்படைத்தார்கள்.

          சுதர்ஸனாவின் கண்கள் சிவந்து கிடந்தது.  முகம் உணர்ச்சிகளின்றி இறுகிப் போயிருந்தது.

           “மிஸஸ்; சுதர்ஸனா உங்கள் பெயரைச் சொல்லி அழைத்தவுடன் நீங்கள் நீதிமன்றத்தினுள் நுழைந்து முன்னால் வந்துவிட வேண்டும், ஓகே,” என்று சுதர்ஸனாவின் சிந்தனையை கலைத்த அந்த இளம் பெண் வழக்கறிஞர் தான் வாழ்க்கையில் வாங்கித் தரப்போகும் முதல் விவாகரத்திற்காக சற்றே டென்ஷனாய் நீதிமன்றத்தினுள் நுழைந்தார்.

           சுதர்ஸனாவின் சகோதரன் கண்ணீர் மல்க அவளது கைகளை அழுத்தினார்.  சுதர்ஸனா ச்சுஎன்றபடி கைகளை விடுவித்துக் கொண்டாள்.

          சுதர்ஸனாவின் தனது மண வாழ்க்கையின் முதல் நாளை நினைவு கூர்ந்தாள்.  அவளுக்கு அன்று எல்லாமே புதிதாய் இருந்தது.  அந்த புதிய ஆபரணங்களின் கனம், எங்கும் நிறைந்திருந்த விதவிதமான புஷ்பங்களின் வாசனை  கூட்டம் கூட்டமாக மனிதர்கள், முன்பின் அறியாத ஹர்ஸா வின் அருகாமைஇவைஇவைஎல்லாம் மிக.. மிக.. புதியதாய்மிகமிகபடபடப்பாய்பயமாய்உணர்ந்தாள்.

          முதலிரவு

           சுதர்ஸனா மிகவும் புதிதாய் விசித்திரமான ஓர் கலவை உணர்வோடு அவர்களது அறையில் நுழைந்தபோதுஹர்ஷா  ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.  இவள் வரும் சத்தம் கேட்டவுடன் சட்டென திரும்பினான்.  அவன் உயரமாய் மாநிறத்தில் சுமாராக இருந்தான்.  அவன் அவளருகே வந்து, “நீ என் வீட்டில் உன் விருப்பப்படி எல்லாம் இருக்கலாம்.  ஆனால் என் அனுமதியில்லாமல் என்னிடம் பேசக்கூட முயலாதே. சரி  சரி இப்பொழுது நீ தூங்கு, என்றபடி கட்டிலில் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

          சுதர்ஸனா திருதிருவென விழித்தாள்.  அவளுக்கு தலையும் வாலும் புரியவில்லை.  அவள் அந்த கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தபடியே அந்த அறையை சுற்றி பார்த்தாள்.  அறை மிகச் சுத்தமாய் அனாவசியமாய் பொருட்களின்றி இருந்தது.  சுவரில் ஒரே ஒரு ஓவியம் மட்டும் ஒரே குழப்பமாய் அவனைப் போலவே இருந்தது.  அவள் அவளறியாமலே சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.

          மறுநாள் காலை 6 மணிக்கு அவர்களது அறைக் கதவை யாரோ தடதடவென்று தட்டினார்கள்.  சுதர்ஸனாஅவசரமாய் கதவைத் திறந்தபோது ஒருவன் விருட்டென உள்ளே நுழைந்து, “அண்ணி நான் ஹர்ஷா வின் சித்தப்பா மகன்.  ஹர்ஷாவை எழுப்பட்டுமா?” என்றான்.

         சுதர்ஸனா புரியாமல் விழித்தபோது ஹர்ஷாவே எழுந்து, “கிஷோர் வந்து விட்டாயா,” என்றபடி வந்திருந்தவனை நெஞ்சாறத் தழுவி முத்தமிட்டான்.

          வந்த கிஷோர் என்பவன் ஹர்ஷாவை விட சின்னவனாக இருந்தான்.  அவனை சுதர்ஸனா முன்தினம் அவளது திருமணத்தில் பார்த்திருந்தாள்.  ஆனால் இருவரும் வெகுநாள் கழித்து பார்ப்பது போல தழுவியபடி நின்றார்கள்.

          அவள் அவர்களை விசித்திரமாக பார்த்த போது ஹர்ஷா, “ உனக்கு இங்கே என்ன வேலைநீபோய் உன் வேலையைப் பார்”, என்று எரியவே அவள் அங்கிருந்து அகன்றாள்.  அவளுக்கு எதுவுமே புரியவில்லை.  ஒரே குழப்பமாய் இருந்தது.  ஹர்ஷா சுதர்ஸனாவிடம் ஒரு லயிப்பு இல்லாதவனாய் இருந்தான்.  இவளிடம் பேசக்கூட இவன் முயல்வதில்லை.  தினமும் கிஷோருடன் வெளியே சென்றால் சிலநாட்களில் இரவு 12 மணி தாண்டி ஹர்ஷா வீடுதிரும்பினான்.  சில நாட்கள் வருவதே இல்லை.  சுதர்ஸனாவிற்கு வாழ்க்கையே பெரும் ஏமாற்றமாய் தோன்றியது. திடீரென்று பொழிந்த பெரிய மழையின் காட்டாற்று வெள்ளம் திருமணமென்ற ரூபத்தில் வந்து அடித்துச் சென்று கரையிலே ஒதுக்கியது போன்ற ஆயாசத்தில் அவள் நாட்களை உணர்வின்றி நகர்த்தினாள்.

          ஒரு வெள்ளிக்கிழமை சுதர்ஸனா கோயிலுக்கு போய்விட்டு வீடு திரும்பிய போது அவளது படுக்கையறை உட்புறமாக தாளிட்டிருந்ததை உணர்ந்து திடுக்கிட்டாள்.  இப்படி பட்டபகலில் நான் இல்லாத சமயத்தில் என் அறையில் நுழைந்திருப்பது யார்”, என்ற யோசனையோடு படபடவென்ற இதயத்தை அழுத்தி பிடித்தபடியே பக்கத்து ஜன்னலை திறக்க முயன்றாள்.

          தாளிடாமல் சாத்தியிருந்த ஜன்னல் சட்டென்று திறந்து கொண்டது.  உள்ளே எட்டி பார்த்தவளின் பாதங்கள் பூமிக்குள் புதையுண்டது போல் தடுமாறியது.  அந்த காணத்தகாத காட்சியில் அவள் உடல் தகித்து எரிந்தது.  அவள் கணவனும் கிஷோரும் இருந்த அலங்கோல காட்சியில் அருவருத்து வெளியே போய் வீட்டின் முன் அறையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டாள்.  உடம்பில் வியர்வை ஆறாக பெருக்கெடுத்தது.  தலை கிறுகிறுவென சுற்றியது.  கண்களில் நீர் மல்க துயரத்துடன் சாய்ந்து கொண்டாள்.

           சிறிது நேரத்தில் வெளியே வந்த ஹர்ஷாவும் கிஷோரும் இவளைக் கண்டு திடுக்கிட்டார்கள்.  பின்னர் சமாளித்து ஒன்றும் அறியாதவர்களாய் ஏதும் பேசாமல் வெளியே கிளம்பிவிட்டனர்.

           அந்த கணதத்தில் இனி தனக்கு இந்த வீட்டில் தாம்பத்திய வாழ்க்கையை தொடர வாய்ப்பில்லை என தீர்மானமாய் முடிவெடுத்தாள்.  சத்தமில்லாமல் தாய்வீடு திரும்பினாள்.

            அதையும் அவள் கணவன் என்று பெரியவர்களால் தீர்மானிக்கபட்டவன் சச்சரவு இல்லாமல் ஏற்றுக் கொண்டான்.

            “சுதர்ஸனா, சுதர்ஸனா, சுதர்ஸனா என்று நீதிமன்ற சிப்பந்தி கூவியதில் சுதர்ஸனா தன்னிலைக்கு வந்தாள்சிந்தனை கலைந்தாள்.  அவளது வழக்கறிஞர் சமிக்ஞை செய்ய அவள் அவசரமாய் நீதிமன்றத்தினுள் நுழைந்துமுன்னே போய் நின்றாள்.

             பின் ஹர்ஷாவும் அழைக்கப்பட்டு உள்ளே வந்தான்.  எப்பொழுதும் போல உணர்ச்சியின்றி முகம் இறுகி நின்றிருந்தான். பின் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நீதிபதி அவர்களது விவாகம் ரத்து ஆனதை அறிவித்தார்.  வெளியே வந்து சுதர்ஸனாவைப் பார்த்து அவளது சகோதரன் சத்தமில்லாமல் விசும்பினார்.  சுதர்ஸனா அவளுடன் வந்த அவளது வழக்கறிஞரிடம் உணர்வுகள் தவிர்த்து கவனமாக உரையாடி விடைபெற்றாள்.

            நீதிமன்றத்தின் வெளியே வந்த அவள் தன்னைத் தாண்டிப் பறந்த அந்த குருவிக் கூட்டத்தை சற்றே நின்று அண்ணாந்து வெறித்தாள்.  அவளுக்கு இன்னமும் புரியவில்லை, “ஹர்ஷா  எதற்காக என்னை மணம் புரிந்தான்?”… யோசனையோடு நடந்தாள்……

நல்ல விலைகொண்டு நாயை விற்பார் அந்த

நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?

கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை

கூட்டிவைத் தார்பழி கூட்டிவிட்டார்

   “பெண்ணன்றோ குடும்பத்தின் உயிர்மூச்சு

  வேதா

ஊர்த்வமூல சிரசில் மலர்ந்தவள் - அவள்

        வேதாவென்ற பெயர் தாங்கி நின்றனள்

ஆலமென்ற குடும்பத்தின் உயிர்நாடி ஆலகாலி

சக்தி வடிவமடா வேதா

உலகிற்கு நன்னிலமாக

நாளெல்லாம் திகழ்ந்திட வரங்கள் வேண்டி

நன்மையைக் கண்டு செம்மையைப் பேசி

வன்மையை கேட்கா உறுதிமிக்க கிள்ளை

வேதத்தின் சத்தையும் அணுசக்தி அசித்தையும்

முழுதாய் உணர்ந்திட்ட பெண்மை

தயவாய் குடும்ப தலைமை ஏற்போம்

அறவழியில் தனம் சேர்த்து வாழ்வோம்

தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உயிர்த்தெழுவோம்

நயமாய் செப்பிகிறாள் சத்தியத்தில் பிள்ளை

மகிழ்ந்து சொல்வதை உணர்ந்திட வாரிர்

நல்லவை கற்று நினைவில் கொள்வோம்

கற்றவற்றை காப்போம் பெற்றவர் போற்றுவோம்

தாயகம் தழைத்திட தாயாவோம்

தாய்மை வரமளித்த தலைவன்நம் சிவனென்றால்

சிவனில் சரிபாதி உயிராகி உரம்செய்வோம் 

தேசீயத்தை ஆன்மீகத்தை அமுதாய் புகட்டி

இளையவரை பாரதத்தின் தூண்களாக்குவோம்


Drop Your Comments Here...

    

REAL LIFE STORIES
தீப்பிடிக்கும் பொகையின் வில்லா

மதியம் சுமார் 2.30 மணி இருக்கும்.  வெயில் சுள்ளென்று கொளுத்தியது.  மேரீஸ் வில்லா Kulasekaram main ரோட்டிலிருந்து சற்றே உள்ளே தள்ளியிருந்தது.  முன்பக்கம் சின்னதாய் பச்சை நிறத்தில் விக்கெட் கேட்.  கேட்டின் மேலே ஆர்ச் வடிவில் வளைத்து கட்டப்பட்டிருந்த கம்பியில் போகெயின்வில்லா செழிப்பாய் படர்ந்திருந்தது.  கொத்து கொத்தாய் பூத்திருந்த பிங்க் போகையின்வில்லா பூக்கள் தீப்பிடிக்கும் வெயிலின் வெளிச்சத்தில் மினுமினுத்தன.

               உள்ளே உயரமாய் கொழுகொழுவென வளர்ந்திருந்த மரத்தின் கீழே ஆங்கேங்கே சிவந்த பவளங்களைப் போல் தெறித்திருந்த குன்னிமுத்துகளை பத்து வயது சிறுமி ஷைனி ஆர்வமாய் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

               “சார் தந்தி”, எனக் கூறியப்படியே தந்தி அலுவலக சிப்பந்தி கேட்டை தள்ளியபடியே உள்ளே வந்தான்.

               ஷைனி வீட்டினுள்ளே ஓடி வந்து, “ அம்மா தந்தி வந்திருக்கிறது”, என்றாள்.

               உள்ளறையில் இருந்து வெளியே வந்த நிர்மலாவுக்கு சுமார் ஐம்பது வயதிருக்கலாம்.  தலைமுடி பாதிக்கு மேல் நரைத்திருந்தது.

               கையெழுத்து போட்டு தந்தியை வாங்கி உள்ளே வந்தார்.  விரித்து படிக்க ஆங்கிலம் அவருக்குப் புரிபடவில்லை, “லே, ஸ்டீபன் சீக்கிரம் இங்கே வாலே இந்த தந்தியில் என்ன வந்திக்குனு படி”, என்றார்.

               படுக்கையறையில் படுத்திருந்த ஸ்டீபன் தளர்ந்திருந்த லுங்கியை சரிசெய்தபடியே வந்து தந்தியை வாசித்தேன்.  தாயைப் பார்த்து, “அம்மா, சுப்ரிம் கோர்ட்டிலேயும் நம்ம கடை கேஸ் தோற்றுப் போயிச்சாம்மா”, என்று தொண்டை கமறக் கூறினான்.

               “ஏசுவே*”,  நிர்மலா நெஞ்சைப்பிடித்தபடியே தரையில் அமர்ந்து விட்டார்.  கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.  சிறிது சிறிதாக அழுகை பெரிதாகியது.

               உள்ளே அடுத்த நாள் பைபிள் க்ளாஸில் எடுக்க வேண்டிய பாடத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த மேரி தாயின் விசும்பல் கேட்டுத் திடுக்கிட்டாள் அவளுக்கு சுமார் 20 வயதிருக்கும் புத்தகங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே முன்னறைக்கு வந்து, “அம்மா என்னம்மா ஏன்அழுகிறீர்கள்”, என்று பரபரத்தாள்.

               “நம்ம கேஸ் மேல் கோர்ட்டிலையும் தோத்து போச்சும்மா”, நிர்மலா மூக்கை உறிஞ்சினார்.

               ஜீலியன் கண்கள் சட்டென்று நிறைந்துவிட்டது.  திடீரென்று உலகமே ஸ்தம்பித்தது. போல் ஆகிவிட்டது.  அவள் ஓடி போய் ஏசுநாதரின் போட்டாவிற்கு முன்பு மண்டியிட்டு இறைச்சி, “கருணை மிக்கவரே ஏன் எங்களை இப்படி சோதிக்கிறீர் ஆண்டவரே? முதலில் எங்கள் பப்பாவை எங்களிடமிருந்து பறித்தீர்.  இப்போது எங்களது ஒரே ஆஸ்தியையும் பறித்துக் கொண்டீரே தேவனே?” என்று மன்றாடிக் கதறினாள்.

               வீட்டில் எல்லோரும் வாழ்க்கையே முடிந்துவிட்டது போல ஆளுக்கொரு மூலையில் முடங்கி கிடந்தார்கள்.  ஜீலி தன் உடம்பின் அத்தனை வலுவும் இழந்தது போல அவள் படுக்கையில் சுருண்டு கிடந்தாள்.

               ஜீலிக்கு துயரம் தாளவில்லை.  பிரதர் செபாஸ்டினைப் பார்த்தால் தான் துயரம் சிறிதேனும் சரியாகும் போல தோன்றியது.

               செபாஸ்டின் 40 வயது தூத்துக்குடிக்காரர்.  தேவனின் விசுவாசிகளுக்காக அவர்களின் பொருட்டு ஊழியம் செய்லதற்காக குலசேகரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கியிருக்கிறார்.  இந்த இரண்டு ஆண்டுகளில் குலசேகரம் மக்களின் மத்தியில் அவர்களுக்காக தேவகமாரனிடம் ஜெபம் செய்து அன்னிய பாஷையில் தெவகுமாரனோடு சம்பாஷனை செய்து நன்மைகள் உண்டாக்கியவர் தேவனின் விசுவாசிகளுக்காகவே தனது மனைவி மக்களைத் தூத்துக்குடியில் விட்டுவிட்டு இங்கே தங்கியிருப்பவர்.

ஜீலி அந்த கான்வன்ட் ஜங்சனில் இருந்த அந்த சிறிய கன்வென்சன் ஹாலுக்குள் நுழைந்தாள்.  தியான கூடத்தில் முக்காடு இட்டு மண்டியிட்டாள் கண்மூடி பிராத்தனை செய்தாள்.

               தேவனே! இந்த கேஸ் ஜெயித்தவுடன் கிடைக்கும் சொத்தை விற்று மதுரையில் நர்ஸரிஸ்கூலில் வேலை செய்யும் என் அக்கா மேரிக்கும், பின் எனக்கும் திருமணம் செய்து, என் தம்பி தங்கையை படிக்க வைக்கலாம் என்று அம்மா திட்டம் வைத்திருந்தாகளே  இப்போ எல்லாம் பாழாய் போயிற்றேஎன்றவாறே விசும்பினாள்.

               அவளுக்கு வாழ்க்கையைப் பற்றி முதன்முதலாய் பயம் ஆழமாய் தோன்றியது.  தந்தையும் இன்றி, பணமும் இன்றி இந்த நித்திலத்தில் தாயின்அரவணைப்பில் வாழம் அநேகம் பெண்களுக்கு வாழ்க்கையை வாழ ஆதாரமில்லாமல் போவது இயல்பாகி விட்டது.  ஜீலிக்கும் அப்படியே தோன்றியது.  வறண்டு பரந்திருக்கும் பெரிய பாலைவனத்தில் குடிக்க வெள்ளமும், உண்ண உணவும் இன்றி தவிக்கும் ஏசுபிரானின் காணாமல் போன ஆட்டுக்குட்டிகளில் ஒன்றாய் நிலைகுலைந்து போயிருந்தாள்.

               அப்போது அவளது முதுகில் ஆதரவாய் கை பதித்த பிரதர் செபாஸ்டின், “சகோதரி  என்ன கவலை உனக்கு, ஏன் கலங்குகிறாய், பயப்படாதே உன்னோடு நான் இருக்கிறேன்என ஆதரவாய் தட்டிக்கொடுதத்தார்.

               அந்த கணத்தில் ஜீலிக்கு செபாஸ்டின் அன்பில் தன் துயரமனைத்தையும் அவர்முன்னே சமர்பித்தாள்.  ஒரே மூச்சாய் அவர் கைகளை பற்றி அழுது தீர்த்தாள்.  அவரும் அவளை கருணையோடு அரவணைத்துக் கொண்டார்.

               சிறிது நேரத்தில் மனம் லேசானதும் ஜீலி வீடு திரும்பினாள்.  பிரதரைப் பார்த்து பேசினாலே மனசு தெளிவாகிவிடுகிறது”, என நினைத்துக் கொண்டாள்.

               மேரிஸ்வில்லா ஒரு வாரமாக களை இழந்து சோகத்தில் திக்குமுக்காடியது.  வீட்டுத் தலைவனை இழந்த சில மாதங்களிலேயே இருந்த ஒரே ஆஸ்தியும் கைவிட்டுப் போய்விடும் போன்ற நிலையில் நிர்மலா மொத்தமாய் நிலைகுலைந்து போனார். கணவனும் இல்லை கடையும் இல்லை எனில் நான்கு குழந்தைகளை எப்படி கரைசேர்ப்பது? அவருக்கு ஒன்றும் புரிபடவில்லை.  மேரியின் திருமணத்திற்காக செய்து வைத்திருந்த சொற்ப நகைகளை எடுத்து ஸ்டீபனிடம் கொடுத்தாள், “ஸ்டீபன், இதை விற்று அந்த பணத்தில் ஏதேனும் வக்கீலை ஏற்பாடு செய்.  எப்படியாவது கடையை மீட்க ஏதாவது செய்யப்பா…,” என கரகரப்பாய் சொன்னார்.

               என்னம்மா இது? அக்காவின் நகைகளை விற்க சொல்கிறாயே.

               “வேறு வழி இல்லையப்பா, நீபோபோய் ஏற்பாடு செய்”.

               ஸ்டீபன் சோர்வாக நகைகளை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.  நிர்மலா முகம் பொத்தி விசும்பினார்.  ஷைனி மலங்க மலங்க, “அம்மாஅழாதே”…என்ற படியே அழத் தொடங்கினாள்.

               ஜீலி நெஞ்சம் பொறுக்காமல் பிரதர் செபாஸ்டினைக் காண ஓடினாள்.

               நிர்மலாவும் கன்வென்ஷன் ஹாலில் போய் ஜீலி பிராத்தனை செய்து அவளுக்கு ஆறுதல் கிடைக்குமென்றால் போய் வரட்டும் என்று அனுமதித்தாள்.

               ஆயிற்றுமாதம் ஒன்று ஓடிவிட்டது.  ஸ்டீபனும் நாயாய் பேயாய் அலைந்தும் பணம் மொத்தமும் விரையமானது தான் மிச்சம், உச்சநீதிமன்றத்தில் தோற்றுவிட்டால் இனி ஒன்றும் செய்ய இயலாது என்று எல்லா வக்கீல்களும் கையைவிரித்த விட்டார்கள்.  சச்சரவு இன்றி கடையை காலி செய்வதே உசிதம் என்று எல்லோரும் அறிவுரை கூறினார்கள்.

               நிர்மலாவும் ஸ்டீபனும் நிராதரவாய் தத்தளித்தார்கள்.  ஜீலி கன்வென்ஷன் ஹாலே கதி என்று கிடந்தாள்.

               கடையை பதினைந்து நாட்களில் காலி செய்ய நீதிமன்றத்திலிருந்து எதிர் கட்சியினரால் அனுப்பப் பட்ட நோட்டீஸ் அன்று கிடைத்தது.

               நிர்மலாவும், ஸ்டீபனும் இரண்டு தலைமுறையாய் அவர்களது குடும்பத்தை காப்பாற்றிய கடையை ஒரு வாரமாக ஒதுக்கி காலி செய்து சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள்.

               உணர்வின்றி வீடு திரும்பினார்கள்.  வாசலிலேயே ஷைனி அழுது கொண்டே நின்றிருந்தாள்.  பதட்டமாய் அவளருகே போய், “என்னம்மா ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள்.

               “அம்மா, ஜீலி அக்காவை காலையில் இருந்தே காணவில்லை.  நான் தேடி தேடிப் பார்த்து பயந்துவிட்டேன்”, என்று அழுது கொண்டே கூறினாள்.

               “இவ்வளவு தானா, ஸ்டீபன் ஜீலி கன்வன்ஷன் ஹாலில் இருப்பாள் போய் அழைத்து வா”, என்றபடியே களைப்பாய் வீட்டினுள் சென்றார்.  அடுக்களை சென்று காப்பி போட எத்தனிக்கையில் சர்க்கரை டப்பாவின் அடியில் ஏதோ கடிதம்.

              புரியாமல் பிரித்துப் படித்தார், “ அம்மா, பப்பாவின் மரணத்திலும் நம் விட்டு அஸ்திவாரம் நொறுங்கியதிலும் பலமாய் காயப்பட்டு நிலத்தில் இடப்பட்ட பேதை மீனாய் துடித்துக் கொண்டிருந்த நான் தெளிந்த நீரோடை என்று எண்ணி புதைகுழியில் குதித்து விட்டேன்.  என் கடிதம் உங்களுக்கு புரியாத புதிராய் இருக்கும்.  ஆனால் எனக்கு வாழ்க்கையே புரியாத புதிராக போய்விட்டது.  நான் கர்ப்பமாக இருக்கிறேன் அம்மா என்னைத் தேட வேண்டாம், அன்பு மகள் ஜீலி”.

              நிர்மலாவுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.  நெஞ்சை லேசாய் வலித்தது.

              ஸ்டீபன் வேகமாய் ஓடி வந்தான்.  அம்மா பிரதர் செபாஸ்டினோடு ஜீலி பஸ்ஸில் போவதை என் நண்பன் பார்த்தானாம்”, என்று மூச்சிரைக்கக் கூறினான்.

              நிர்மலாவின் கால்களில் பூமி நழுவியது.  வேரறுந்த ஆலாய் கீழே நிர்மலா சாய்ந்தார்.

              ஸ்டீபனும் ஷைனியும்…… எதுவும் புரியாமலே…… அழுதார்கள்……


Drop Your Comments Here...

    

REAL LIFE STORIES
தாட்சாயிணி

சத்யலஷ்மிக்கு அதிகாலை மூன்று மணிக்கே விழிப்பு ஏற்பட்டுவிட்டது.  அலாரம் நான்கு மணிக்குதான் வைத்திருந்தாள்.  ஆயினும் தூங்க இயலவில்லை.  புரண்டு புரண்டு படுத்திருந்தாள்.  மதுரை மீனாட்சி கல்லூரில் பயின்று சரித்திரத்தில் முதுகலை பட்டம் பெற்றிருந்தாள்.  அங்கு கற்ற கல்வியினால் பெற்ற கல்வியினால் பெற்ற மேன்மையைவிட மீனாட்சி கல்லூரியில் கற்ற சமஸ்காரங்கள் அதிக பயன் மிக்கவை.  தூக்கம் முழுமையாக கலைந்துவிட்டது.  கல்லூரியில் ஏற்பட்டப் பழக்கம்மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து சூர்ய நமஸ்காரும், ப்ராணாயமும், செய்து முடிக்கையில் அலாரம் அடித்தது.

              சிவலிங்க நாடார், “சத்திசத்தி…” என்றழைத்தபடியே  நடுதளத்திலிருந்து, சுத்துக்கட்டைத் தாண்டி வந்தார்.

           “சத்திதியானம் பண்ணிட்டிருந்தியாடூ சரி..சரி... அம்மைய எழுப்புவேலை ரொம்ப இருக்கு.  ரெத்தினமணிநாடார் வீட்டிலிருந்து உன்ன பாக்க வாராவ இல்ல”… என்றபடி பின்தளம் தாண்டி தோட்டத்திலிருந்து கிணற்றடிக்குச் சென்று தண்ணீர் மொண்டு குட்டுவத்தில் நிறைத்து வெந்நீர் அடுப்பில் தீ மூட்டினார்.

          சிவலிங்கநாடாருக்கு தக்கலை பகுதியில் தேங்காய் வியாபாரம். அவருக்கும் சண்முகவடிவிற்கும் முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தில் ஐந்து பெண் மக்களும், இரண்டு பெண்களை வசதியான இடத்தில் மணம் செய்வித்திருந்தார் சண்டுகவடிவு கோழிக்கூட்டை திறந்துவிட்டு, பசுக்களை தொழுத்திலிருந்து மாற்றிக் கட்டினார்.   சிவலிங்க நாடார் பசுக்களுக்கு வைக்கோல் போரிலிருந்து வைக்கோல் உருவி போட்டார்.  கோழிகள் சணமுகவடிவிற்கு பின்னால் வரிசையாக ஓடியது.  அடுக்களைக்குள் சென்று டப்பாவில் இருந்து நெல் எடுத்து பே!பேபேஎன்றபடியே சண்முகவடிவு பின்முற்றத்தில் இறைத்தார்.  கோழிகள் வடிவை சூழ்ந்து தம் இறையை கொண்டன.  இதற்கிடையே சத்தி தொழுவத்தை சுத்தமாக கழுவி முடித்திருந்தாள்.

                “பிள்ளேமச மசன்னு நிக்காம குளிச்சி ஜோரா தயாராயிடு.  அவிய 9 மணிக்கெல்லாம் வந்திருவாவஎன்றபடியே சிவலிங்கநாடார் குளித்தார். 

            அடுக்களையில் சுடச்சுட இட்லியும், சாம்பாரும், மெதுவடையும் சத்தியை பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு தயாரானது. சுகந்தியும் லலிதாவும் வடிவிற்கு உதவியாக சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். சத்தியக்கா நீ போய் குளி உனக்கு இன்னைக்கு வேலை இல்லை ஓடுஓடுஅப்பா சத்தம் போடும் முன்னே குளிச்சிருஎன்று விரட்டினார்கள்.

           சத்தி கிணற்றடிக்குப் போய் வாளியில் சந்தோசத்தை நிரப்பி நிரப்பி தலையில் ஊற்றி கண்கள் மூடி குதூகலமாக குளித்தாள்.  வீட்டிற்கு வந்து மஞ்சள் பட்டு கட்டி வட்டத் திலகமிட்டுஅடர்ந்த நீண்ட கூந்தலை குளிபின்னல் கட்டி தயாராகினாள்.  வடிவு முதல்நாள் பறித்து தொடுத்து வைத்திருந்த நித்யகல்யாணி சரத்தை சத்தியிடம் கொடுத்துவிட்டு ஒரு நொடி மகளை பூரிப்பாய் பார்த்தார்.  சத்தி முறுவலித்தபடியே பூவைச் சூடிக் கொண்டாள்.

வியாவாரியாரேயாவாரியாரேஅவிய வந்திட்டாவ”… என்ற படியே பண்ணையாள் வேலாயுதம் வந்து கூறினான்.

சிவலிங்கநாடார் வேகமாப் போய் கேட்டைத் திறந்தார்.  ரெண்டு அம்பாஸிடரில் ரெத்தினமணிநாடாரும் மாப்பிள்ளையும் பெண்களும் வந்திருந்தார்கள்.

வாங்க, வாங்கஉள்ளேவாங்கஉக்காருங்க”… என்றபடியே சிவலிங்கநாடார் வந்தவர்களை நடுதளத்தில் அமர வைத்தார்.  மாப்பிள்ளையும், ரெத்தினமணிநாடாரும் வேறு இரு ஆண்களும், ரெத்தினமணிநாடாரின் மனைவி மரியம்மையும், இரு பெண் மக்களும் அவர்களது மாப்பிள்ளைமாரும் வந்திருந்தனர்.

வடிவுவடிவுஇங்க வா.  அவிய வந்திட்டாவஎன்று சிவலிங்கநாடார் அழைக்கவே வடிவு பவ்வியமாக நடுதளம் வந்து, வந்தவர்களை வாங்கஎன்றபடியே வணங்கினார்.  அவருக்குத் துணுக்கென்றிருந்தது.  வந்திருந்தவர்களில் ஒரு பெண் கூட நெற்றியில் திலகம் இல்லாமல் மூளியாக இருந்தனர்.

வடிவுசத்திய கூட்டிட்டு வா”… சிவலிங்கநாடார். வடிவு உள்ளே போய் மகளை அழைத்துவந்தார்.  மஞ்சள்பட்டில் சத்திலஷ்மி சாட்சாத் லஷ்மியாகவே மாறியிருந்தாள்.  நடுதளம் வந்து எல்லோருக்கும் மையமாக வணக்கம் சொல்லி மெதுவாக மாப்பிள்ளையை நேராகப் பார்த்தாள் சூரியப் பிரகாசமாய் கண்கள் மின்ன அவன் உதடுகளில் பூத்த புன்சிரிப்பு அவளைத் தொற்றிக் கொண்டது.  பெரியவர்கள் அகமகிழ்ந்தார்கள்.  சீர் செனத்தி இத்தியாதி இத்தியாதி பேசப்பட்டன.  திருமண ஏற்பாடுகள் வெகு விமரிசையாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் வடிவிற்கு மட்டும் ஏனோ இந்த சம்பந்தம் பிடிக்கவில்லை இடையே சிலர் வந்து மாப்பிள்ளையின் குணநலன்கள் சரியில்லை என்று கூறியது அவர் வயிற்றில் புளியைக் கரைத்தது பயந்தபடியே சிவலிங்கநாடாரிம் போய், “ஒண்ணு கேட்டா கோவப்பட மாட்டியளே.  வந்திருந்த பொம்பள ஒருத்தி நெத்தியிலாவது பொட்டு வைச்சிருந்தாளுவளா. மாப்பிள்ளை பேரு கூட ராபின்சன்னு கிறிஸ்தவப் பெயரா இருக்கே.  அவிய இந்துவா, கிறிஸ்தவரான்னு விசாரிச்சியளா.  மாப்பிள்ளை நடத்தை வேற சரியில்லைன்னு வேலாயுதன் கிட்ட யாரோ சொன்னாவளாம்கொஞ்சம் யோசிச்சி முடிவெடுப்போமொ…?” என்று புலம்பித் தீர்த்தார்.

       சிவலிங்கம் சிரித்தபடியே, “பைத்தியகாரச்சி போல பேசாத.  நம்ம மூத்தவ சரஸ்வதிக்க மாமியாகாரியும் கிறிஸ்தவ பொம்பள தானே.  தங்கமணிநாடார் இருக்க வேண்டிய விதத்தில் இருந்ததால அவிய குடும்பக்கார ஒருத்தர் கூட கிறிஸ்தவரா மாறல்ல.  பத்து பிள்ளையும் இந்துவா தானே இருக்கானுவ.  இருக்கவன் ஒழுங்கா இருந்தால் சிரைப்பவன் ஒழுங்கா சிரைப்பான் பிள்ளே.  சங்கடப்படாதேரத்தினமணிநாடாரும் நெஞ்சில வீறாப்பு உள்ளவன் தான்”.

எனக்கென்வோபயமாத்தான் இருக்குது.  மண்டைக்காடு கலவரம் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆயிப்போச்சு.  ஆனாலும் நம்மூர் மக்க       மனசில இந்துகிறிஸ்தவன்பிரிவினை மட்டும் போகலையே.  நம்ம பிள்ளை போய் கஷ்டப்பட்டிரக்கூடாது.

அடியே நம்ம நாடாருமாருக்குள்ளே என்ன இந்து கிறிஸ்தவன்.  நாடானுக்கு மதத்தைவிட சாதி தாண்டி முக்கியம்.  கலவரத்துக்கு பின்னால எல்லா  இந்து நாடானும் உஷாராயிட்டானுவ திடமான இந்து நாடான் மதம் மாற மாட்டாண்டி.  இரத்தினமணி திடமானவன் மாப்பிள்ளையை பாத்தியா சூரியக்குஞ்சா இருக்கான்.  வக்கீல் வேற. ஐஞ்சு பொம்பள பிள்ளை வைச்சிட்டு ரொம்ப கணக்கெடுக்காத.  வேலையைப்பாரு போ..போ..என்று விரட்டினார்.  இதைக்கேட்டபடியே சத்தியலகஷ்மி சுத்துக்கட்டில் போட்டிருந்த கட்டிலில் படுத்திருந்தாள்.  உத்தேசித்தபடி சிவலிங்க நாடார் வீட்டு முற்றத்தில் போடப்பட்டிருந்த பிரமாதமான மணப்பந்தலில் வைத்து ராபின்சன் சத்தியலஷ்மியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் கட்டினான்.  கட்டப்பட்ட மாங்கல்யத்தை கண்களில் ஒற்றிய சத்தியின் கண்களை சிவலிங்கத்திற்கு பதிலாக பொறிக்கப்பட்டிருந்த சிலுவை உறுத்தியது.  அவளது வலது கண்ணம் உதடுகளும் துடித்தன.  அவள் மதுரை மீனாட்சி அம்மனை உளமாற பிராத்தனை செய்தாள்.  சத்தியலஷ்மியை சகல சீர்வரிசைகளோடு ராபின்சன் வீட்டிற்கு அனுப்பினார்கள்.  தேங்காய்பட்டிணம் போகும்போது ராபின்சன் சத்தியின் கைகளை தன் கைகளுக்குள் பூட்டியபடியே, “நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் நீ தங்கம் போல அழகு”  என்றான்.  சத்தியின் மனம் லேசானது.  மாலை வரவேற்பு முடிந்து முதலிரவு சத்தி ராபின்சனுக்காக அறையில் காத்திருந்தாள்.  ராபின்சன் அறைக்குள் வந்து சத்தியின் அருகில் அமர்ந்தான்.  அறைமுழுக்க மது வாசைன பரவியது.  சக்தி இயல்பாய் பின்னால் தள்ளி அமர்ந்தாள். 

          “ஹிஹிபிரன்ட்ஸ் கம்பல் பண்ணிட்டாங்க நான் பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருந்தேன்.  கொஞ்சமா அடிச்சேன்”… என்றபடியே சத்தியை தன்வசப்படுத்தினான்.  வழக்கம் போல சத்தி 4 மணிக்கு விழித்துக் கொண்டாள்.  மெல்லிய வெளிச்சத்தில் கணவனை பார்த்தாள்.  என்னசெய்வதன்று புரியாமல் மலங்க விழித்தபடியே விடியும் வரை அமர்ந்திருந்தாள்.  6 மணிக்கு எழுந்து அறையை விட்டு வெளியே வந்தாள்.

         “சத்திராபினை எழுப்பி நீயும் சீக்கிரம் ரெடியாயிடு.  சர்ச்சுக்கு போகணும்.  உனக்கு ஞனஸ்தானம் வாங்க ஏற்பாடு செய்யணும்என்றபடியே மரியம்மை அடுக்களைக்குள் சென்றாள். 

சத்தி அறைக்கு போய் கணவனை எழுப்பினாள்.  ராபின்சன் கஷ்டப்பட்டு கண்விழித்தான்.

    “ஒரு விஷயம் சொல்லணும்என்றாள் சத்தி

என்னடூ

            “உங்க அம்மா என்னையும் உங்களையும் சர்ச்சுக்கு போக ரெடியாக சொன்னாவ எனக்கு ஞானஸ்தானத்திற்கு ஏற்பாடு செய்யவாம்”.

            “ஓ ரெடியாயிடலாமேஎன்றபடியே எழுந்தான்.  தயங்கியபடியே நிற்கும் மனைவியிடம்

            “என்ன” ? என்று வினாவினான்.

             “நான் சர்ச்சுக்கு வரவில்லைஎனக்கு ஞானஸ்தானம் வேண்டாம் என்று கூறினாள்.  லேசாக உடல் நடுங்கியது.

             அவன் சிரித்தபடியே, “எங்க அம்மா சொன்னா அப்பீலே கிடையாதுஎன்றபடி போனான்.

            சத்தியையும் ராபினையும் மரியம்மாள் சர்ச்சுக்கு அழைத்துப் போனார்கள் அங்கு பலாரிடம் சத்தி அறிமுகப்படுத்தப்பட்டாள்.  வயதான பெண்ணொருத்தி நாசூக்காக   சத்தியின் நெற்றி திலகத்தை அழிக்க முயன்றாள்.  சத்தி தன்னிச்சையாய் அவள் கைகளை தட்டிவிட்டாள்.  அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பிரவாகமாக பீறிட ஓடிப்போய் காரில் அமர்ந்து கொண்டாள் மரியம்மையின் முகம் சிறுத்துவிட்டது.  வீடு திரும்பிய பிறகு ஓர் அமானுஷ்யமான அமைதி நிலவியது.

         ராபின் கோபமாக சத்தியிடம், “ஏன் அப்படி செய்தாய் ? என் பொண்டாட்டி என் அம்மாவுக்கு அடங்கி நடக்கணும்.  அவ விருப்பபடி இருந்தாதான் இங்கே இருக்க முடியும்என்படி போய்விட்டான்.

         மாலைவரை சத்தி அறைக்கு வெளியே போகவில்லை இரவு ராபின் நிறைய குடித்திருந்தான்.  சத்தியை தனதாக்கினான்.  மூன்று மாதம் சத்தியின் வாழ்க்கை இப்படியே போனது.  கணவன் வீட்டில் யாரும் சாரிவர பழகவில்லை.  இருமுறை தாய்வீட்டிற்கு விருந்திற்கு வந்த போது அவள் எதையும் பெற்றோரிடம் சொல்லவில்லை அடுத்த ஆறு மாதங்களில் ராபின் அத்தனை தீய பழக்கங்களுக்கும் ஆளானான்.  பெண்போதை என்று எதையும் அவன் விட்டுவைக்கவில்லை என்பதை அவள் புரிந்து கொண்டான்.  அவளது நகைகள் ஒவ்வொன்றாக ராபினால் தொலைக்கப்பட்டது.  நகைகளை கொடுக்க சத்தி மறுத்த போதெல்லாம் அடித்து துன்புறுத்தப்பட்டாள்.

              ஏழாவது மாதம் அவள் தாயாக போவதை உணர்ந்து மனம் மலர்ந்தாள்.  ஆனால் அவன் வெகு நாட்களாக வீட்டிற்கு வரவில்லை.  நர்ஸ் ஜலஜாவின் வீட்டில் பழிகிடையாக கிடப்பதாக கொழுந்தனமார்கள் சொன்னார்கள்.  எட்டாவது நாள் வீடு வந்த ராபினிடம் சத்தி தான் கர்ப்பமாக இருப்பதை கூறவில்லை.  ஏதோ முடிவிற்கு வந்தவளாக தனது சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.  அதுவரையில் தனியா எங்குமே சென்று பழக்கம் இல்லாத சத்தி தனியாக புறப்பட்டாள்.

              “எங்க போற ? மரியம்மை கேட்டாள்.

              “எங்கேயும் போயிட மாட்டேன்.  நிச்சயம் திரும்ப வருவேன்என்றபடி படியிறங்கினாள் சத்தி.

     வெளியே வந்து பஸ் ஸ்டாப் இருக்குமிடம் விசாரித்து மார்த்தாண்டம் பஸ் பிடித்து மார்த்தாண்டம் வந்தாள்.  பத்திரிகை விளம்பரதமொன்றை காண்பித்து பெரியவர் ஒருவாரிடம் வழி விசாரித்தாள்.  ஹிந்து வித்தியாலயா பள்ளிக்குப் போய் முதல்வரை சந்தித்து பத்திரிகை விளம்பரத்தையும் சான்றிதழையும் காண்பித்து வேலை கேட்டாள்.  மாதம் ஒன்றிற்கு ரூபாய்.750/- சம்பளத்திற்கு ஆசிரியை வேலை கிடைத்தது.  உறுதியுடன் வீடு திரும்பிய போது வீடு அல்லோலகல்லோலப் பட்டது.  ராபின் நிறைய குடித்தபடியே படியேறிய சத்தியின் முடியைப்பிடித்து இழுத்து முகத்தில் அறைந்தான், “எங்கடி போனே.  அம்மாவ எதிர்த்து எங்கே போன”.

           “ஊர் மேயுற கழுதையை வீட்டுக்குள்ளே விடாத.  இல்லையினா வெளியே போக முடியாத படி செய்டாஎன்று மரியம்மை அலறினாள்.

                ராபின் கோபமாக அறைக்குள் போய் சத்தியின் புடவைகளை எடுத்து அனைத்தையும் முற்றத்தில் போட்டு தீ கொடுத்தான்.

                “இனி எப்படி வெளியே போவஎன்று கெக்கலித்தான்.

                சக்தி அத்தனை ரணங்களையும் கொடுஞ்சொற்களையும் அடிகளையும் உள்வாங்கிக் கொண்டாள்.  மனதை சமநிலைப் படுத்தினாள்.  முதல் முதலாக பெரிதாக ஆனால் உறுதியான குரலில் சன்னமாக தீர்க்கமாக பேசினாள்.

       நாளை முதல் மார்த்தாண்டம் ஹிந்து வித்யாலயா பள்ளிக்கு வேலைக்குப் போறேன்.  இனி மேல் என்னால் பொறுத்திருக்கமுடியாது.  ஏன்னா நான் ஒரு தாயாகப் போகிறேன்.  எனக்கு ராபினைப் போல பிள்ளை வேண்டாம்.  பெண்ணை மதிக்கத் தொரிஞ்ச பிள்ளையா என் பிள்ளையை நான் வளர்க்கணும்.  அதுக்கு எனக்கு பணம் வேணும்.  உறுதியான மனம் வேணும்.  நான் படிச்ச கலாச்சாரத்தை கத்து தரவும் வேணும்.  அதுக்கு நான் வேலைக்கு போகத்தான் வேணும்.  என்னை யாராலும் தடுக்க முடியாது.  இங்கிருந்து விரட்டவும் முடியாது”… உறுதியாகக் கூறி அறைக்குப் போய் கதவை சாற்றிக் கொண்டாள்.

            எல்லோரும் விக்கித்து நின்றனர்.

             சத்தி தன்னறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்து மீனாட்சி தாயை வணங்கினாள்.  தனக்குள் கூறினாள்

             “என் இனிய புக்ககக் காரர்களே!

             மண வாழ்வின் அகத்துக் காரர்களே!

             நான் மதம் மாற மாட்டேன் !

 என்னுள்ளம் மாற்றமாட்டேன்

 

எனைப்பெற்ற அன்னையைக் கொன்றிடவும் முடியுமா ?

உயிர்வளர்த்த பாரதத்தை அழித்திடவும் முடியுமோ ?

தித்திக்கும் தேந்தமிழை மறந்திடவும் முடியுமோ ?

எனை ஆளாக்கிய ஹிந்துத்துவம் மாய்த்திடவும் முடியுமா ?

நான் மதம் மாற மாட்டேன்.

 

துணைவனாக வந்தவன் துஷ்டனாகிப் போனாலும்

வாழவந்த இல்லமிங்கே இல்லையென்று வீழ்ந்தாலும்

நான் பெற்ற பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்தாலும்

உடுத்துகின்ற துணிகளெல்லாம் தீயிலேப் போட்டாலும்

நான் மதம் மாற மாட்டேன்

 

தூக்கிலே போட்டாலும் காட்டிலே வீசினாலும்

என் இனிய புக்ககக் காரர்களே

நான் மதம் மாற மாட்டேன்

நான் உயிர் ஈன்ற பிள்ளைகளை

என்னுணர்வு ஊட்டி வேள்வி வளர்ப்பேன்.


Drop Your Comments Here...

    

VVictory Legal Associates Since 1997 (Madurai Bench of Madras High Court)

ESTABLISHED BY:Smt.L.Victoria Gowri M.Sc., B.L.Madurai Bench of Madras High Court, Madurai & All the Courts in the District of Kanyakumari.